Skip to main content

இந்தியா‍ vs ஆஸ்திரேலியா T20: புல்வாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக அஞ்சலி

இந்தியா‍ vs ஆஸ்திரேலியா T20:

புல்வாமா தாக்குதாலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக  இரண்டு நிமிட அமைதிகாக்குமாறு இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார். பிப்ரவரி 24 ஆம் தேதி ஞாயிறன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது விசாகப்பட்டின மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் புல்வாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக  இரண்டு நிமிட அமைதிகாக்குமாறு இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார். இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆடினர். 

பிப்ரவரி 24 ஆம் தேதி ஞாயிறன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது விசாகப்பட்டின மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் புல்வாமா தாக்குதாலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக  இரண்டு நிமிட அமைதிகாக்குமாறு இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார்.

இரு நாட்டு வீரர்களும் தேசிய கீதம் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சில பகுதிகளில் மக்கள் சத்தம் அதிகமாக இருந்தது. கோலி கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்றது மைதானம் அமைதியானது.

இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆடினர்.

indian team paying homage to the martyrs' crpf jawans

மேலும் போட்டிக்கு முன்பாக கோலி அளித்த பேட்டியில், பாகிஸ்தானுடனான உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு துணை நிற்பதாக தெரிவித்தார்.

இந்தியா போட்டியை மறுத்து விட்டது என்று வந்த செய்திகளெல்லாம் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் இருநாடுகளிடமிருந்தோ, ஐசிசியிடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. 

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கு பாகிஸ்தானுடன் உலகக் கோப்பையில் ஆடக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, சேத்தன் சவ்கான், ஹர்பஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.

உலகக்கோப்பைப் போட்டியில் ஜூன் 16-ம் தேதி  நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதா? என்பது குறித்து இன்னும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த முடிவை மத்திய அரசிடம் பிசிசிஐ விட்டுவிட்டது. அதற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கின்றன.

virat

இது குறித்து ஆலோசனை நடத்த, பிசிசிஐ சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் (February 22) டெல்லியில் நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி வினோத் ராய் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என வினோத் ராய் கூறினார்.

Virat Kohli Asks Vizag Crowd To Stay Quiet During Two-Minute Silence

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.