Skip to main content

இந்தியா ‍- வங்கதேச அணிகள் மோதும் இறுதி பயிற்சி ஆட்டம்!

இந்தியா ‍- வங்கதேச அணிகள் மோதும் இறுதி பயிற்சி ஆட்டம்

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.

கடந்த 24-ந் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

newzealand vs india warmup game

இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு வெவ்வேறு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. கார்டிப்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்தியா VS வங்கதேசம் அணி!

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

எனவே இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும்.

மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்தியா ‍- வங்கதேச அணிகள் மோதும் இறுதி பயிற்சி ஆட்டம்

நியூசிலாந்து VS மேற்கிந்திய தீவுகள் அணி!

பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கின்றது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

India to take on Bangladesh in final warm-up game of ICC World Cup

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.