Skip to main content

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 18 வது லீக் ஆட்டம்: ‍டாஸ் போடுவதில் தாமதம்!

india vs newzealand

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஜூன் 13 ஆம் தேதி இன்று  நியூஸிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. நாட்டிங்காமில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

போட்டி நடைபெற உள்ள பகுதியில் தீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே இந்தியா நியூஸிலாந்து அணிகள் இடையேயான முக்கியமான போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

nottingham

காலை முதல் அப்பகுதியில் மழை இல்லை என்றாலும், டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி 3 லீக் ஆட்டத்தில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக் உள்ளதால், இந்திய அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளதும் நியூசிலாந்து வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

india vs newzealand

போல்ட், சவுத்தீ, பெர்குசன், நீஷம் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கப்தில், நிகோல்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

அதே சமயம், பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் இந்திய வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். 

ICC World Cup: India to take on New Zealand this afternoon- Toss Delayed Due to Rain.

india vs newzealand
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.