Skip to main content

இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

neet exam

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயில மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது தேர்வு மே மாதம் நடைபெற்றது.

மருத்துவம் பயில மாணவர் சேர்க்கை  நீட் முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந் தேதியும், 20-ந்தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு நாளை ஜூன் 5 ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது.

நீட் தேர்வு

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, மொத்தம் 15,19,375 மாணவர்கள் நீட் 2019 நுழைவு தேர்வுக்கு பதிவு செய்தனர், இதில் 14,10,754 மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர்.

தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் நேரடியாக தெரிந்துகொள்ளலாம்:

https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx

neet exam

NEET 2019 தகுதி மதிப்பெண் 6 சதவீதம் குறைக்கப்பட்டது

2019 ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட் - ஆப் (Cut-Off) மதிப்பெண்கள் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கவேண்டும் என அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • பொது பிரிவினர் (General Category) - 44 % எடுத்தால் தேர்ச்சி. 
  • மாற்றுத்திறனாளிகளுக்கு (persons with disabilities category) - 39 % எடுத்தால் தேர்ச்சி. 
  • இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC)- 34 % எடுத்தால் தேர்ச்சி. 
  • பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு (SC/ST) - 34 % எடுத்தால் தேர்ச்சி.

NTA NEET Result 2019 date and time confirmed: Check NEET results @ https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.