Skip to main content

இந்தியா மீதான "வரி இல்லா இறக்குமதி" வாபஸ் - அமெரிக்கா

இந்தியா மீதான "வரி இல்லா இறக்குமதி" வாபஸ் - அமெரிக்கா

இந்தியாவிலிருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்துவந்த  50 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

இந்தியாவிலிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் 90 பொருட்களில் 50 பொருட்களுக்கு வரியில்லா இறக்குமதியை திரும்ப பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.  இதில் பெரும்பாலானவை இந்திய கைவினைப் பொருட்கள், விவசாயத் துறை உற்பத்தி பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச வர்த்தக உறவுகளில் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான வரிவிலக்கினை நீக்க  முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையினை அமெரிக்க பெடரல் பதிவு செய்துள்ளது. அதில், பொதுவான முன்னுரிமை நடைமுறை (GSP-Generalized System of Preferences) அடிப்படையில் இந்தியாவிலிருந்து 90 பொருட்கள் வரியில்லா இறக்குமதி பட்டியலில் உள்ளன.

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் செவ்வாய்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், நவம்பர் 1-ம் தேதியிலிருந்து வரியில்லா இறக்குமதி பட்டியலில் இருக்கும் பொருட்கள் நீக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, ஜிஎஸ்பி விதிமுறைகள் படி இந்த பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது. அதேநேரத்தில் அமெரிக்காவின் பொதுவான வரிவிகிதங்கள் படி இறக்குமதி செய்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் உத்தரவில், எந்த ஒரு நாட்டையும் தனியாகக் குறிப்பிடவில்லை. ஆனால்  பொருட்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பட்டியலில் இந்தியா மிகப் பெரிய பயனாளியாக இருந்தது. இதனால் அதிபர் ட்ரம்பின் சமீபத்திய இந்த உத்தரவு  இந்தியாவுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

தற்போதைய உத்தரவின்படி இந்தியாவிலிருந்து வரியில்லாமல் இறக்குமதியாகும் 50 பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். இதனைபயன்படுத்துவதில் இந்தியா மிக முக்கிய நாடாகும்.  இந்த ஜிஎஸ்பி விதிமுறையின் கீழ் 2017-ம் ஆண்டில்  இந்தியா வரியில்லாமல் ஏற்றுமதி  செய்துள்ள வர்த்தகத்தின் மதிப்பு 560 கோடி டாலராகும்.

அமெரிக்காவுக்கான  வரி இல்லாத ஏற்றுமதி காரணமாக இந்திய சிறு குறு நிறுவனங்கள் தங்களது கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தன. தற்போது வரி விதிப்புக்குள் வருவதால் இவர்களுக்கு பாதிப்புகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

US revokes duty-free concession on import of 50 Indian products

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.