Skip to main content

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறுகிறது.

விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 81 ரன்கள் எடுத்தால் விரைவாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

தற்போது 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

குவாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

குவாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 323 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 47 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

அணி விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், சிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், கெய்ரன் பொவல், ஆஷ்லே நர்ஷ், கீமோ பால், ரோவ்மான் பொவல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஷேன் தாமஸ், ஓபேட் மெக்காய்.

India vs West Indies Second One day match scheduled today at 1.30 pm

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.