Skip to main content

இந்தியா‍-மேற்கிந்திய தீவுகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி!!!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நவம்பர் 1 ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.  

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் 2 டெஸ்டிலும் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இதையடுத்து கவுஹாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று, 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, மும்பையில் நேற்று அக்டோபர் 29 ஆம் தேதி நடந்தது. 

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது, ரோகித் சர்மா (162), ராயுடு (100) ஆகியோர் சதம் விளாசி கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 36.2 ஓவரில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி, 224 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், சமன் செய்யும் முனைப்பில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், மேற்கு இந்திய தீவுகள் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. 

இந்திய வீரர்கள் நிகழ்த்த உள்ள புதிய சாதனை  

இந்தியாவின் நட்சத்திர வீரர் தோனி 1 ரன் அடிக்கும் பட்சத்தில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற பெருமையை படைப்பார். 

ரோகித் ஷர்மா 33 ரன்கள் அடித்தால் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அடைவார். 

ஷிகர் தவான் 109 ரன்கள் சேர்த்தால் இந்த ஆண்டில் 1000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவரும் இடம் பெறுவார். 

அதே போன்று தவான் 71 ரன்கள் சேர்த்தால் ஒருநாள் போட்டியில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அடைவார். 

ஜடேஜா 18 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை கடப்பார். 

பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரா் என்ற பெருமையை படைப்பார். 

Today November 1, India vs West Indies last ODI at trivandrum 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.