Skip to main content

இந்திய விமான சேவைகளில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடா?

இந்திய பொருளாதாரம்

சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு உத்தரவுகள் வெளியானதை தொடர்ந்து, இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய இரண்டு உள்நாட்டு விமான சேவைகளும் திங்கட்கிழமை இயங்கவிருந்த சுமார் 60 விமானங்களை ரத்து செய்துள்ளன.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ப்ராட் மற்றும் விட்னி தயாரித்த PW1100 பிரிவின் கோளாறான எஞ்சின்களை கொண்ட ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களை இயக்கக்கூடாது என இந்தியாவின் விமான கண்காணிப்புத்துறை ஆணையிட்டுள்ளது.

இதனால் இன்டிகோவின் 8 விமானங்களும், கோ ஏர் சேவையின் 3 விமானங்களும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இதே எஞ்சின்களை கொண்ட 3 விமானங்களை இயக்க இன்டிகோ சேவை தடை செய்தது.

ஏன் இந்த தடை?

சமீபத்தில் தொடர்ந்து சில விமானங்களில் எஞ்சின் கோளாறுகள் ஏற்பட்டது, இந்தியாவின் விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்த சர்ச்சையை எழுப்ப சிவில் விமான போக்குவரத்து துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

 

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று கோ ஏர் விமானம் ஒன்று லே(Leh)விலிருந்து புறப்பட்டு, எஞ்சின் கோளாறு காரணமாக திரும்பி தரையிரக்கப்பட்டது.

மார்ச் 5ஆம் தேதி, இன்டிகோ விமானம் எஞ்சின் பழுதடைந்ததால் புறப்பட்ட உடனேயே மும்பையில் தரையிரக்கப்பட்டது.

"எஞ்சின் தோல்வியடைவது என்பது இப்போதெல்லாம் அடிக்கடி நிகழ்கிறது" என்கிறார் முன்னாள் விமானப் பயிற்றுவிப்பாளர் மற்றும் விமான பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான கேப்டன் மோகன் 

 

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விமானங்கள் செயல்பட, ஒரு ஆண்டுக்கு 25 எஞ்சின் கோளாறுகள் ஏற்படும் என்பது உலக சராசரி. அப்படியானால் மாதத்திற்கு 2. ஆனால் இந்தியாவில் ஏறக்குறைய வாரத்திற்கு ஒரு முறை எஞ்சின் கோளாறு ஏற்படுகிறது" என்று மோகன் தெரிவித்தார்.

விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு எஞ்சின் பழுதடைந்தால், விமானம் தொடர்ந்து பறக்கும், அதனை பாதுகாப்பான இடத்தில் தரையிரக்க முடியும். ஆனால் புறப்படும் போதே எஞ்சின் தோல்வி அடைவது என்பது ஆபத்தான ஒன்று.

"சமீபத்தில் நடந்த இதுமாதிரியான சம்பவத்தில், எஞ்சினின் உட்புற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது எஞ்சினினை சிதைத்து விடும். இந்தியாவில் விமான நிலையங்களை சுற்றி பல கட்டடங்கள் உள்ளன. விமானம் புறப்படும் போது, எஞ்சின் தோல்வி அடைந்தால், அது ஏற்படுத்தும் சேதத்தை சரி செய்வது மிகவும் கடினம்" என்று கேப்டன் மோகன் குறிப்பிட்டார்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.