Skip to main content

இந்திய தேர்தல் ஆணையம் மோடியிடம் சரணடைந்துவிட்டது - ‍ராகுல் காந்தி!

sunil arora

இந்தியாவில் 17 வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி முடிந்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 23 ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

rahulgandhi vs narendra modi

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பிரதமர் மோடி கேதர்நாத் சென்றதையும், அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதர்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் ஆணையம், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரணடைந்துவிட்ட ரகசியம் அனைத்து இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது.

rahulgandhi twitter post

தேர்தல் ஆணையம், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது.

இனிமேல் அப்படி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Election Commission has Surrendered to Narendra Modi: Rahul Gandhi

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.