Skip to main content

இந்திய ரயில்வேயில் 1.3 லட்சம் காலியிடங்கள்!

RAILWAY RECRUITMENT  BOARD

இந்திய ரயில்வே குழு டி பிரிவில் இடங்களை நிரப்புவதற்கு (ஒரு லட்சம் இடங்கள்) மற்றும் பிற பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பவும் (30,000 காலியிடங்கள்) அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே மொத்தம் 1.3 லட்சம் வேலைவாய்ப்புகளை ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையில் தென்னக ரயில்வே, மேற்கு ரயில்வே உள்பட 16 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், டிக்கெட் வழங்குபவர், நிலைய அதிகாரி, சரக்கு ரயில் பணியாளர், இளநிலை கணக்கு உதவியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர், ஈ.சி.ஜி. டெக்னீசியன், ஆய்வக கண்காணிப்பாளர், உதவியாளர், சுருக்கெழுத்தர், தலைமை சட்ட உதவியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர் (இந்தி), தண்டவாள பராமரிப்பாளர் கிரேடு-4, எலக்ட்ரிக்கல், எந்திரவியல், பொறியியல் பிரிவுகளில் உதவியாளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்தந்த மண்டலங்களின் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு பிரிவு (ஆர்.ஆர்.சி.) ஆகிய இணையதளங்களில் ஓரிரு நாளில் வெளியாகும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை தொடர்ந்து கண்காணிக்கவும்,

http://www.rrbcdg.gov.in/

அதேபோன்று, IAS, IPS, IFS போன்ற 24 மத்திய ஆட்சி பணிகளில் 896 பேரை தேர்வு செய்ய மத்திய நிர்வாக பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் 39 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்களில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு மட்டுமல்லாமல் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு முதன் முறையாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான தேர்வுக்கு என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

முதற்கட்ட தேர்வு ஜூன் மாதம் 2-ந் தேதி நடக்க உள்ளது.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை தொடர்ந்து கண்காணிக்கவும்,

https://upsconline.nic.in/

RRB NTPC Recruitment 2019: 1 lakh Group D posts notified by Indian Railways

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.