Skip to main content

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அதிகரிப்பு

இந்திய பங்குச்சந்தை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் ஜி ஜின்பிங் இருவரும் ஜி -20 சந்திப்பில் தங்களது வர்த்தக போரை நிறுத்த ஒப்புதல் அளித்ததன் விளைவாக ஆசிய பங்குகளில் பி.எஸ்.இ. சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவும், சீனாவும் தற்காலிகமாக வர்த்தகப் போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பது உலக அளவிலும், ஆசிய பங்குச்சந்தைகளிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்று டிசம்பர் 3 காலை வர்த்தகத்தின்போது ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது.

30-பங்குகளின் குறியீடு தொடக்கத்தில், 181.52 புள்ளிகள் அல்லது 0.50 சதவீதமாகவும், 0945 மணி நேரத்தில் 36,375.82 புள்ளிகளாகவும் இருந்தது.

என்எஸ்இ நிஃப்டி 30.80 புள்ளிகள் அல்லது 0.28 சதவிகிதம் 10,907.55 என்ற அளவில் இருந்தது.

உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் கொள்முதல் மேலாளர்களின் குறியீட்டு தரவை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நவம்பர் 30 ஆம் தேதி 332.62 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 1,489.65 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதனிடையே, இன்று டிசம்பர் 3 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா அதிகரித்து 70.08 ஆக குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் சர்வதேச அளவிலான குறியீட்டு எண், 4.78 சதவீதம் உயர்ந்து 62.30 டாலராக இருந்தது.

Sensex surges over 200 points on December 3 due to US-China trade halted their tariff war at the G20

meet.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.