Skip to main content

இந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி!

PM Narendra Modi's Aircraft to Fly Over its Airspace to Kyrgyzstan 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், தனது வான்வழிப் பாதையை மூடுவதாக அறிவித்தது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களின் சர்வதேச விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை தவிர்த்து, சுற்றி போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இந்திய விமான சேவைகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்துவதாக அமைந்தது.

இந்த நிலையில் மோடி மீண்டும் வெற்றி பெற்றதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார். 

PM Narendra Modi's Aircraft to Fly Over its Airspace to Kyrgyzstan 

இதற்கிடையே கடந்த மே மாதம் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல இம்ரான் கான் அனுமதித்தார்.

இந்த நிலையில் ஷாங்காய் மாநாட்டுக்கு பங்கேற்க செல்ல இருக்கும் மோடிக்கு பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையொட்டி பிரதமர் மோடி விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி உள்ளது. பாகிஸ்தானின் இந்த அணுகுமுறைக்கு இந்தியா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan to Allow India PM Narendra Modi's Aircraft to Fly Over its Airspace to Kyrgyzstan 

PM Narendra Modi's Aircraft to Fly Over its Airspace to Kyrgyzstan 

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.