Skip to main content

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சியோல் அமைதி பரிசு!

நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு தென் கொரிய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்கு அளிக்கப்பட்டது. அங்குள்ள இந்திய மக்கள் மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென் கொரியாவுடன் வர்த்தகம், முதலீடு, நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இந்த  பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று இரவு (February 21) தென் கொரியா புறப்படும் முன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தென் கொரியா இந்தியாவுக்கு மிக முக்கியமான நட்பு நாடு. குறிப்பாக "மேக் இன் இந்தியா", உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுக்க ஊக்கமாக இருந்த நாடு. இரு ஜனநாயக நாடுகளும் தங்களின் மதிப்புகளும், பிராந்திய கண்ணோட்டத்தையும், அமைதியையும் பகிர்ந்து கொள்ளும்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் இருநாடுகளும் கூட்டுறவுடன் செயல்படுவது வரவேற்கத்தக்கது, அடிப்படை அறிவியல் முதல் முன்னணி ஆய்வுகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது வரவேற்கக்கூடியது.

நமது மக்கள் தென் கொரிய மக்களுடன் நல்ல நட்புறவோடும், வர்தத்க பரிமாற்றங்களோடும் இருக்கிறார்கள். ஒன்றாக இணைந்து  பணியாற்றுவது, எதிர்காலத்தில் நமது உறவை முன்னோக்கி அழைத்துச் செல்லும்" என பதிவிட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப்பின் பிரதமர் மோடி 2-வதுமுறையாக தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபர் மூன் ஜா இன்னை இன்று சந்தித்து பேச உள்ளார்.

நரேந்திர மோடி

பிரதமர் மோடியின் பயணம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், "இந்தியாவின் சிறப்பு நாடான தென் கொரியாவுக்கு பிரதமர் மோடியின் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்தும். இந்த பயணத்தில் பிரதமர் மோடி வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய உள்ளார். சியோல் அமைதிப் பரிசையும் ஏற்க உள்ளார் " எனத் தெரிவித்தார்.

தென் கொரிய தலைநகர் சியோல் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் கொரிய அரசு பிரதிநிதிகள் பூங்கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றனர். விமானநிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்துக்களையும், வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்.

சியோல் அமைதி விருது

சியோல் அமைதி விருது, தென் கொரியாவில் நடைபெற்ற 24 வது ஒலிம்பிக் போட்டியின் வெற்றிக்காக 1990 ஆம் ஆண்டில் சியோல் அமைதி பரிசு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 160 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றன, இந்த இணக்கம் மற்றும் நட்பு மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கியது. கொரிய தீபகற்பத்திலும் கொரிய தீபகற்பத்திலும் சமாதானத்திற்கான கொரிய மக்களின் விருப்பத்தை தெளிவுபடுத்துவதற்காக சியோல் அமைதிக்கான அமைப்பானது நிறுவப்பட்டது.

தற்போது 2018 ஆம் ஆண்டிற்கான அமைதி விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படவுள்ளது. 

PM Modi In South Korea: Bilateral Talks, Business Meetings On Agenda

narendra modi

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.