Skip to main content

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்க்கு ஐசிசி மரியாதை!

yuvaraj sing

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், இடக்கை சுழல்பந்து வீச்சாளருமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங்

2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் நட்சத்திரவீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை நேற்று  (ஜூன் 10) அறிவித்தார்.

2000-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.

Thank You Yuvi

37 வயது நிரம்பிய யுவராஜ் சிங் இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 இருபது ஒவர் போட்டிகள் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக யுவராஜ் சிங் நேற்று அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டிவிட்டரில் முன்னாள் வீரர்கள் விரேந்திரசேவாக், முகமது கைப் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் யுவராஜ் சிங்கிற்கு வாழ்த்து செய்திகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

yuvi retires

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் மீண்ட யுவராஜ், பலருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தனது வாழ்நாளின் மீதியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யுவராஜ்க்கு மரியாதை செய்யும் நோக்கில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங்கின் புகைப்படத்தை வைத்து கௌரவப்படுத்தியுள்ளது.

#ThankYouYuvi: The world reacts to Yuvraj Singh's international retirement

icc

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.