Skip to main content

இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படுத்திய இடைத்தேர்தல்கள்

இந்திய அரசியல்,

மத்தியிலும், உ.பி., யிலும் ஆட்சியில் உள்ள, பா.ஜ.க, கோரக்பூர் மற்றும் புல்பூர் இடைத்தேர்த லில் தோல்வியை தழுவியது, இந்திய அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி, இடைத்தேர்தலில் தோற்பது, அரிதிலும் அரிது. இந்த இரண்டு தொகுதிகளும், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர், கேசவ் மவுர்யாவின் அசைக்க முடியாத கோட்டைகளாக திகழ்ந்தவை.
 

இந்த இடைத்தேர்தல், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மட்டு மின்றி, பெரிய அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கு வழி வகுத்தது. இந்த தேர்தல் முடிவு, 2019 தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான வலுவான கூட்டணி அமையும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இது போன்று, ஆறுக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் அல்லது தேர்தல்கள், இந்திய அரசியலில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியதை நிரூபித்துள்ளன.


* கடந்த, 1963, இடைத்தேர்தல்: உ.பி.,யில், புல்பூர் தொகுதியில், பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக, பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் ராம் மனோகர் லோஹியா போட்டி யிட்டார். எனினும், 1963 மே மாதம், உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.
 

* ஆசம்கர், உத்தர பிரதேசம், 1978: ஆசம்கரில், மோஷினா கித்வாய், 45, பெற்ற வெற்றி, அவசர நிலையின் போது, காங்., கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் மன்னித்து, வட மாநிலங்களில் மீண்டும் வர உதவியது.


* சிக்மகளூர், கர்நாடகா, 1978: 1977 தேர்தலில், மொரார்ஜி தேசாய் தலைமையில், காங்., அல்லாத கட்சிஆட்சியமைத்ததும், ஆட்சியிழந்த இந்திரா காந்தி, 1978ல் சிக்மகளூர் தொகுதியில் நடந்த லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி, காங்., கட்சியை, அவரது தலைமையின் கீழ் கொண்டு வர உதவியது.


* அமேதி, உ.பி., 1981: பிரதமர் இந்திராவின் இளைய மகனும், அவருக்கு மிகவும் நெருக்கமானவருமான, சஞ்சய் காந்தியின் இறப்புக்கு பின், ராஜிவ் காந்தி அரசியலில் ஈடுபட்டார். இடைத் தேர்தலில், லோக் தள் கட்சியின் சரத் யாதவை, 2.58 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஜிவ் வெற்றி பெற்றார். பின், 1984ல், சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட பின், ராஜிவ் பிரதமரானார்.


* பீஜனுார், உபி., 1985: இளம் மாயாவதி சைக்கிளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். எங்கு வேண்டு மானாலும் நிறுத்தி, சாலையில் யாருடனும் சாப்பிட்டதுடன், கிளம்பும் முன், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுடன் பேசினார். பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாவதாக வந்தாலும், இந்திய அரசியலில் அவருடைய நம்பிக்கையை உறுதி செய்தது.
 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.