Skip to main content

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் - நெருங்கிய நண்பர்களுடன் ஸ்டோரிஸ் பகிரலாம்!!!

இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் - நெருங்கிய நண்பர்களுடன் ஸ்டோரிஸ் பகிரலாம்!!!

இன்ஸ்டாகிராமில் இனி சிறிய குழுக்களை உருவாக்கி ஸ்டோரிஸை ஷேர் செய்யலாம். யூசர் ப்ரோஃபைல்-க்கு அருகில் இருக்கும் மெனுவில் இதற்கான ஆப்ஷனைக் காணலாம்.

பேஸ்புக் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கூறுகையில், இந்த புதிய ஆப்ஷன் மூலம் ‘Close Friends' க்கான சிறிய குழுவினை உருவாக்கி அதில் ஸ்டோரியினை ஷேர் செய்யலாம்.

இன்ஸ்டாகிராமினை பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த சிறிய குழுவினை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். நீங்கள் அந்த ஸ்டோரியை பார்த்தால், அதில் பச்சை நிற பேட்ஜ் தோன்றும் என்று தெரிவித்துள்ளது.

வருவாய் ஈட்டுதலில் இன்ஸ்டாகிராம் வளர்ந்து வருவதால், பேஸ்புக் தனது முழு கவனத்தையும் இன்ஸ்டாகிராம் மீது செலுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த அடாம் மூசோரி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய முயற்சிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் ஸ்நாப் சாட் உள்ளது.

Instagram new update - can create small groups for your close friends and share your stories.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.