Skip to main content

இன்று துவங்குகிறது 2019 ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலகக்கோப்பை!

world cup

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மே 30 ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளது.

ஜூலை 14 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் துவங்கவுள்ளது.

இந்த போட்டியில் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

dale steyn

இந்தியா

இந்தியா ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

ஜூன் 1 ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெற உள்ள தகுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது ஆட்டத்தை துவங்கவுள்ளது.

இருமுறை உலக சாம்பியன்களான இந்தியா, தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5 அன்று சவுத்தாம்ப்டனில் தனது முதல் ஆட்டத்தை துவங்கவுள்ளது.

india

இந்திய அணி கடந்த 1983 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க போட்டி வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

10 அணிகள்:

2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன. ஆனால் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்யும் வகையில் இந்த 2019 உலக கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

சிறிய அணிகள் அதாவது ஐசிசி உறுப்புநாடுகள் எதுவும் இடம் பெறாத ஒரு போட்டியாக இந்த உலகக்கோப்பை நடைபெறவுள்ளது.

newzealand vs india warmup game

இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 

1992–ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

ICC Cricket World Cup 2019 begins today

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.