Skip to main content

இன்று முதல் உலகமெங்கும் - காஞ்சனா 3

Kanchana 3

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் “முனி”. அப்பட வெற்றியின் தொடர்ச்சியாக கதை கருவை வைத்துக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் “காஞ்சனா”, “காஞ்சனா 2” என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் லாரன்ஸ்.

அந்த வரிசையில் தற்போது "காஞ்சனா 3" படம் இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியானது. 

முன்னதாக ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதால், படம் ஒரு நாள் கழித்து ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஏப்ரல் 19 ஆம் தேதி படம் வெளியானது. 

kanchana3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர்.

முனி படத்தில் நடித்த நாயகி வேதிகா இப்படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.

மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 "காஞ்சனா 3"

காஞ்சனா 3 படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.

மேலும் "காஞ்சனா" படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் ராகவா லாரன்ஸ். அதில் ஹீரோவாக அக்‌ஷய் குமாரும் ஹீரோயினாக கியாரா அத்வானியும் நடிக்க உள்ளனர்.

Kanchana 3 released

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.