Skip to main content

இனி இந்த 50 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியில்லை!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளர் மற்றும் சமநிலைக்குழு நிர்வாகிகள் பங்கேற்ற 60 வது சமநிலைக்குழு கூட்டம், கடந்த மாதம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சில பட்டப்படிப்புகள், அரசு வேலை பெறுவதற்கு உரிய பட்டபடிப்புகளுக்கு சமமாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இத்தீர்மானத்தை அரசாணையாக பிறப்பிக்க தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த தமிழக அரசு அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,

  • பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஎ (BCA) பட்டம் பிஎஸ்சி கணிதவியல் (B.Sc.Maths) படிப்பிற்கு நிகரல்ல என குறிப்பிட்டுள்ளது.
  • பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் வழங்கப்படும் எம்எஸ்சி பயன்பாட்டு நுண்ணுயிரியல் (M.Sc.Microbiology) பட்டப்படிப்பு எம்எஸ்சி விலங்கியல் (M.Sc. Zoology) பட்டபடிப்பிற்கு சமமானதாக கருதப்படாது.
  • மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்எஸ்சி உயிர்வேதியியல் (M.Sc Biochemical technology) தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்பு  எம்எஸ்சி உயிர்வேதியியல் (M.Sc Biochemistry) பட்டபடிப்பிற்கு நிகர் ஆகாது.
  • பாரதியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்எஸ்சி கைத்தொழில் பயோடெக்னாலஜி (M.Sc Industrial Biotechnology), எம்எஸ்சி நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (M.Sc Nano Science and Technology) (இயற்பியல் அடிப்படையிலான) எம்.எஸ்.சி. உயிர்வேதியியல் அல்லது எம்.எஸ்.சி இயற்பியலுக்கு சமமானதாக அங்கீகரிக்கப்படாது. மேலும் பல. 

பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகளை அரசு வேலை வாய்ப்பிற்கு தகுதியாக கருத முடியாதென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Govt. identifies degrees not meeting TNPSC requirement for employment

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.