Skip to main content

இலங்கையில் தமிழ் மக்கள் புகார் அளிக்க புதிய வசதி!

இலங்கை

இலங்கை காவல் துறையினரிடம் குற்றச் செயல்கள் குறித்து தமிழ் மொழியில் உடனடியாக முறைப்பாடு செய்வதற்கான தொலைத்தொடர்பு சேவையொன்று இலங்கை காவல்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் காவல்துறையுடன் அவசரமாகத் தொடர்பு கொள்வதற்காக 119 என்ற இலக்க தொலை தொடர்பு வசதி ஏற்கனவே இருக்கின்ற போதிலும், தமிழ் மொழி மூலம் அந்த இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் தமிழ் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக காவல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே இந்த புதிய தொலைத்தொடர்பு சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை முதல் முறையாக வடமாகாணத்தின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கென ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என காவல்துறை அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.