Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி 3 அடுக்கு காவல்!

velanganni church

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட 53 மீனவ கிராமங்களில் 24 மணி நேரம் காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

​   velankanni church

மேலும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், 19 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பேராலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Sri Lanka blasts: Tight security for Velankanni Church in Tamil Nadu

​    ​serial bombblast in srilanka on easter day

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.