Skip to main content

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

National Investigation Agency investigate in coimbatore

கோவையில் இரண்டாம் நாளாக 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு என்ற புகாரில் அசாருதீன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

​   national investigation agency investigate in coimbatore

அன்பு நகர் ஷாஜகான், கரும்புக்கடை ஷபியுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் ஏழு பேர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதையடுத்து 6 பேரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு!

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷாகின் ஷா என்ற இப்ராஹிம், ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய ஆறு பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர். 

​    ​serial bombblast in srilanka on easter day

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றது.

இந்த அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. 

NIA identifies six Coimbatore youths as part of an IS module

national investigation agency investigate in coimbatore

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.