Skip to main content

இளையதளபதியின் "பிகில்": தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கியது "Screen Scene"!

#Bigil

விஜய் நடித்து வரும் "பிகில்" படத்தின் பர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை விஜய்யின் பிறந்த நாள் பரிசாக அளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி சற்றுமுன் தனது ட்விட்டரில் இந்த படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

"பிகில்" படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே கிட்டத்தட்ட வியாபாரமும் முடிவடையும் நிலையில் உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை 30 கோடி ரூபாய்க்கு "XGEN Studio" & "United India Exporters" நிறுவனங்கள் பெற்றது குறித்து தகவல் அளித்த அர்ச்சனா, தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனத்தின் பெயரை அறிவித்துள்ளார்.

screen scene

'பிகில்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை "Screen Scene" நிறுவனம் பெற்றுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை குவித்த நிலையில் பிகில் பட வசூலும் சாதனை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

"Screen Scene" Procured the most sought after Tamilnadu Theatrical Rights of Bigil

bigil
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.