Skip to main content

இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டப்படும் கட்டிடச் செலவை ஏற்பதாக‌ இசைஞானி அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா

இசையமைப்பாளர் சங்கத்திற்கு தமது சொந்த செலவில் கட்டடம் கட்டிக் கொடுப்பதாக இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை (மே 2 ஆம் தேதி) முன்னிட்டு திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோரும், திரளான ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

நேற்று மே 2 ஆம் தேதி மாலை இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி அருகே இசை நிகழ்த்தி நடைபெற்றது. இதில் பாடகர்கள் கலந்துகொண்டு பாடல்களைப் பாடினர்.

பாடகர் மனோ பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் கொடுக்க உள்ளே நுழைந்தவரை, நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ததாக இளையராஜா கடுமையாக அர்ச்சித்தார். இதனால் நிகழ்ச்சி சில நிமிடங்கள் தடைபட்டது.

இசைஞானி இளையராஜா

500 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிவிட்டு 5 ஆயிரம் ரூபாய் இருக்கையில் அமரலாமா என்றும் இளையராஜா கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை ஆரவாரம் செய்து வரவேற்ற ரசிகர்கள், சில பாடல்களை ஆர்வமின்றி கேட்டுக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டப்படும் கட்டிடத்திற்கான செலவை தாம் ஏற்பதாகத் தெரிவித்தார். கட்டடத்தின் மாதிரியை அங்கிருந்த இசைக்கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.

Ilaiyaraaja promised to construct a building for Cine Musician’s Union.

இசைஞானி இளையராஜா

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.