Skip to main content

"ஃபானி புயல்" ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

cyclone fani

ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை மே 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்தது. பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று மே 6 ஆம் தேதி நேரில் பார்வையிட்டார். 

fani cyclone

தனி விமானம் மூலமாக பார்வையிட்ட பிரதமர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் கணேஷிலால் ஆகியோரிடம் வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

இதன்பின்னர் ஃபானி புயல் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, "நவீன் பட்நாயக் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

இதேபோன்று அரசு தெரிவித்த அறிவுரைகளை ஒடிசா மக்களும் சரியான முறையில் பின்பற்றியுள்ளனர். இது பாராட்டுதலுக்கு உரியது" என்று கூறினார்.

cyclone fani

1,500-க்கும் அதிகமான பேருந்துகள் மக்களை இடமாற்றும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அவர்களுடன் தன்னார்வலர்களும் இரவு பகலாக பணியாற்றி, பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

ஃபானி புயல் பாதிப்புக்கு பின்னர் ஒடிசாவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 5 ஆயிரம் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.

cyclone fani

ஃபானி புயல் நிவாரண உதவியாக மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் ஒடிசாவுக்கு வழங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.   

இதேபோன்று மேற்கு வங்கமும், ஆந்திராவும் புயலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

PM Surveys Cyclone Fani Damage, Praises Naveen Patnaik For "Good Planning"

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.