Skip to main content

ஃபானி புயல்: மத்திய குழுவின் ஆய்வு இன்றுடன் நிறைவு!

ஃபானி புயல்:

ஒடிசாவில், ஃபானி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட மத்திய குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த குழு கடந்த மூன்று நாட்களாக ஒடிசாவில் ஆய்வு செய்து வந்தது. அவர்களின் ஆய்வு பணி இன்றுடன் நிறைவடைகிறது.

ஃபானி புயல் கடந்த மே 3 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடந்தது. பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

cyclone fani

ஃபானி புயல் நிவாரண உதவியாக மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் ஒடிசாவுக்கு வழங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விவேக் பரத்வாஜ் தலைமையிலான 11பேர் கொண்ட மத்திய குழு ஒடிசாவின் புரி, கட்டாக் மற்றும் குர்தா மாவட்டங்களில் புயல் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை கேட்டு அறிந்தது.

cyclone fani

புயல் காரணமாக ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய குழு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். இதற்கிடையில், மாநில அரசு புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளின் மதிப்பீடு குறித்த ஆய்வை இன்று முதல் துவங்கியுள்ளது. 

முழுமையாக அல்லது கணிசமாக சேதமடைந்த வீடுகள் ஒரு வாரத்திற்குள் கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளது.

Odisha: 11-member central team assessing damage caused by cyclone Fani to conclude its visit today.

fani cyclone

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.