Skip to main content

ஹஜ் புனித யாத்திரை: இந்தியாவிற்கு புதிய சலுகை!

ஹஜ் புனித யாத்திரை:

இந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 20,000 பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள சவுதி அரேபிய இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் இஸ்லாமியர்கள் இனி ஹஜ் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 17,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டத்து இளவரசராக முடிசூடிய பிறகு, முதல் அரசு முறை பயணமாக இந்தியா வந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் முதலீடு, சுற்றுலா, வீட்டுவசதி, ஒலிபரப்பு ஆகிய துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு தொடர்பான வழிகாட்டு ஒப்பந்தத்திலும் சவுதி அரேபியா கையெழுத்திட்டது.

இதனைத் தொடர்ந்து, மோடியும், முகமது பின் சல்மானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சல்மான் சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுக்கு, பயங்கரவாத எதிர்ப்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவில் விவசாயம், உற்பத்தித்துறை, எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் 3,12,000 கோடி ரூபாய் அளவுக்கு சவுதி அரேபியா முதலீடு செய்துள்ளதாக சல்மான் கூறினார். மேலும் 7, 00,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.

mohammed bin salman

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நடப்பாண்டு முதல் இந்தியாவில் இருந்து மேலும் 20,000 பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவில் இனி ஹஜ் பயணம் செய்ய முடியும் என்றார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, சவுதி அரேபியா இந்தியாவின் மதிப்பு மிகுந்த நட்பு நாடு என்றார். சர்வதேச சூரிய மின்னுற்பத்தி கூட்டமைப்பில் சவுதி அரேபியா இணைந்துள்ளதை வரவேற்பதாக மோடி கூறினார். எரிசக்தி பாதுகாப்பில் சவுதி அரேபியா இந்தியாவின் மிக முக்கிய கூட்டாளி என்றார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயலாற்றும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்புத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை ஒழிப்பது, பயங்கரவாதத்திற்கான ஆதரவு நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது, பயங்கரவாதிகளை ஆதரிப்போரை சட்டத்தின் முன் நிறுத்துவது என அனைத்து வழிகளிலும் இந்தியாவும், சவுதி அரேபியாவும் இணைந்து செயல்படுமென மோடி தெரிவித்தார்.

Saudi Arabia raises India’s Haj quota to 200,000

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.