Skip to main content

ஹிமாச்சல பிரதேசத்தில் சீனா எல்லைக்கு அருகே பனிச்சரிவு: 5 ராணுவ வீரர்கள் நிலை என்ன?

ஹிமாச்சல பிரதேசத்தில்

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் ஷிப்கா லா பிரிவில் சீன எல்லைக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டத்தில் சிக்கிய 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி கடந்த 24 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நாகர்கியாவில் இருந்து ஷிப்கா லா எல்லையை நோக்கி பதினாறு ராணுவ வீரர்கள் ஒரு சேதமடைந்த நீர் குழாயை சரிசெய்ய சென்றனர், பனிச்சரிவு 11 மணியளவில் அவர்களை தாக்கியபோது அவர்கள் பனிக்குள் சிக்கினர். இந்த சம்பவத்தில் ஒரு ஜவான் இறந்தார். இறந்த வீரர் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள குமரூபூர் கிராமத்தில் ராகேஷ் குமார் (41) என அடையாளம் காணப்பட்டார்.

இமயமலை எல்லையோரத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் சீனா எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 5 பேர் மாயமாகி உள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஷாக்சு சர்மா கூறும்போது,‘‘இமயமலையின் வடக்குப் பகுதியின் எல்லையோரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ அதிகாரி ஒருவர் பலியனார். அவரது உடல் மீட்புப் பணி வீரர்களால் மீட்கப்பட்டது. இத்துடன் 5 ராணுவ வீர்ரகள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மாயமான சிலரை தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் 4,500 மீட்டர் உயரத்தில் தண்ணீர் விநியோக்கிக்கும் பகுதியில் ஏற்பட்ட சிக்கலை சரிபார்த்தப்போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியில் பரவலாக பனிச்சரிவு ஏற்படும், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் இப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவிற்கு 21 பேர்பலியாகியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

24 hours on, 5 Army soldiers hit by avalanche still trapped near China border in Himachal Pradesh

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.