Skip to main content

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய பெண்

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய பெண்

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி ஸ்ருதி பழனியப்பன் (20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் சக்திவாய்ந்த அமைப்பாக இளங்கலை கவுன்சில் உள்ளது. இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு ஸ்ருதியும், துணைத் தலைவர் பதவிக்கு அவருடன் சேர்ந்து போட்டியிட்ட ஜூலியா ஹூசா (20) என்பவரும் வெற்றி பெற்றனர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சொந்த வீடு போல் மாற்றுவோம் என்று கூறி ஸ்ருதி வாக்கு சேகரித்தார். இதற்கு மாணவர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இந்திய பெண்
ஸ்ருதி பழனியப்பன்,                                                                              ஜூலியா ஹூசா

தேர்தலில் ஸ்ருதியும் ஜூலியாவும் 41.5 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இவர்களை அடுத்து இரண்டாமிடம் பிடித்த ஜோடி 26.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

தற்போது இளங்கலை கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள ஸ்ருதியும் ஜூலியாவும் விரைவில் முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளனர்.

ஸ்ருதியின் பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். கடந்த 1992-ல் இவர்கள் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பிலடெல்பியாவின் ஜனநாயக தேசிய மாநாட்டில் பங்குபெற்ற இளைய பிரதிநிதி ஸ்ருதி பழனியப்பன் ஆவார்.

பெண் இருவரும், தங்கள் ஆரம்ப நாட்களில் மாணவர் கவுன்சில் குறித்த தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பாக வேலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.