Skip to main content

ஹைதராபாத்தின் மெட்ரோ ரயில் தூணில் இருசக்கர வாகனம் மோதி மூவர் பலி

மெட்ரோ ரயில்

இன்று நவம்பர் 20 ஆம் தேதி, ஹைதராபாத்தின் மேட்டுகுடாவில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் உப்பலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் உதய் குமார் ரெட்டி, ப்ருத்வி மற்றும் உதய் என்றும்,மூவரும் 21 முதல் 22 வயதுள்ளவர்கள் என்றும் காவல்துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர்.

லலகுடா காவல்துறையினர் கூறுகையில், விபத்து அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்டதாகவும், செகண்டேராபாத்தில் இருந்து அலகாடபவிக்கு மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ​​விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த உதய் கிரண் ரெட்டி இருசக்கர வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டியுள்ளார். இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு போடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் தூணில் வேகமாக மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்து நடந்த இடத்தை காவல்துறையினர் நேரில் பார்வையிட்டனர். மேலும் உடல்களைக் கைப்பற்றி காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Three killed on spot in an accident as two wheeler hits Metro pillar in Hyderabad.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.