Skip to main content

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர ஆன்லைன் பதிவு துவக்கம்

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர என்ன செய்ய வேண்டும்?

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிபதற்கான நுழைவுத்தேர்வு வரும் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று நவம்பர் 16 ஆம் தேதி துவங்கி உள்ளது. இந்த ஆண்டு விண்ணப்ப பதிவானது, முதல் நிலை மற்றும் இறுதி நிலை என இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. 

முதல் நிலை விண்ணப்ப பதிவு இன்று நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறும்.

அதன் தகவல்கள் ஜனவரி 3 (2019) தேதி அறிவிக்கப்படும். விண்ணப்பப் பதிவின் இறுதிநிலை விவரங்கள் ஜனவரி 4ம் தேதி தெரியவரும்.

நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எனப்படும் நுழைவு சீட்டு மே 14 (2019) ஆம் தேதி வெளியாகும். தேர்வின் முடிவானது ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படும். 

முதல்கட்ட கலந்தாய்வு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்திலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்திலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 4 ஆம் வாரத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.aiimsexams.org/info/Course.html

மேல் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தில் இருந்து, 2019 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்விற்கு தெரிவு செய்ய விரும்பும் மாணவர்கள் எய்ம்ஸ் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அடிப்படை பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

முதற்கட்ட படிவத்தை பூர்த்தி செய்தவுடன், அடுத்தகட்ட இறுதி படிவம் தேர்விற்கு மூன்று மாதங்களுக்கு முன் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்த இறுதி படிவத்தை பூர்த்தி செய்த மாணவர்கள் மட்டுமே ஜூன் மாதம் நடைபெறும் 2019 ஆம் ஆண்டிற்கான எய்ம்ஸ் மருத்துவ தேர்வில் பங்குபெற முடியும்.

மாணவர்கள் எய்ம்ஸ் இன் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியான நேரத்தில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணைய தளத்தை  அணுகவும், https://www.aiimsexams.org/

AIIMS MBBS 2019: Registration process started from november 16 th.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.