Skip to main content

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 2 மாதத்தில் 11,000 கிலோ குப்பைகள் அகற்றம்!

Nepal’s Clean-Up Campaign

எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்த நிலையில், மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

2 மாதத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.

எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தொடங்கியது. இப்பணியில் நேபாள ராணுவத்துடன், நேபாள மலையேற்ற சங்கம், சுற்றுலாத்துறை, எவரெஸ்ட் மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சில தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்.

Nepal’s Clean-Up Campaign

மலையேறும் வீரர்கள் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள், காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், வாட்டர் பாட்டில்கள், கேன்கள், பேட்டரிகள், உணவு பாக்கெட்டுகளின் கவர்கள் போன்றவை அகற்றப்பட்டன. மலையேற்ற பயிற்சியின்போது காணாமல் போனவர்களின் சடலங்களும் அகற்றப்பட்டன.

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் மற்றும் 4 மனித உடல்கள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Nepal’s Clean-Up Campaign

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், எவரெஸ்ட் குப்பைகளில் ஒரு பகுதி, மறு சுழற்சிக்காக தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டும் இதேபோன்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Four Dead Bodies and 11,000 kg of Garbage Collected from Mt. Everest, as Nepal’s Clean-Up Campaign Concludes.

Nepal’s Clean-Up Campaign

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.