Skip to main content

எத்தியோப்பியா விமான விபத்தில் சிக்கிய இந்தியர்கள்!

ethiopian flight accident

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான 4 இந்தியர்களில் ஒருவரான ஷிகா கார்க் குடும்பத்தை தொடர்பு கொள்ள உதவுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

​    ​ethiopia airlines crash​    ​

நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில்  விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்.

இந்த விமான விபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 157 பேரும் உயிரிழந்தனர். இதில் 4 இந்தியர்களும் பலியானார்கள்.

 பலியான இந்தியர்களில் ஷிகா கார்க் எனும் பெண் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிரிதிநிதியாக நைரோபியில் நடக்கும் ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கச் சென்றார்.

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து!

அப்போது இவர் விபத்தில் சிக்கினார். மேலும், ஷிகா கார்க் தவிர்த்து, வைத்தியா பன்னாகேஷ் பாஸ்கர், வைத்யா ஹசின் அன்னாகேஷ், நுகவரபு மணிஷா ஆகிய இந்தியர்களும் பலியானார்கள் என்று எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்தது.

indian casualties in Ethiopian plane crash could be four

​    ​ethiopia airlines crash

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.