Skip to main content

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்

வில்ம‌ட்

1996 ஆம் ஆண்டு உலகை வியக்க வைத்த குளோனிங் முறையில் ''டாலி என்ற செம்மறி ஆடு'' உருவாக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஒருவரின் மகள் இறந்து விட்டாள்..

மகளின் நினைவால் வாடுவதாகவும்,தன் மகளின் செல்லை எடுத்து மீண்டும் தன் மகளை உருவாக்கித் தருமாறு டாலியை உருவாக்கிய வில்ம‌ட்டிற்கு கடிதம் எழுதினார் அந்த தந்தை.

அதற்கு டாலியை உருவாக்க காரணமாக இருந்த வில்ம‌ட் எழுதிய பதிலை காண்போம்

"ஐயா., உங்களின் வேதனை எனக்கு நன்கு புரிகிறது. எனது ஆழ்ந்த வருத்தங்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

ஆனால், உங்கள் மகளின் செல்லில் இருந்து வேறு ஒரு மனுசியை உருவாக்கினால் அவர் தனிப்பட்டவராகத் இருப்பார்..

அவரிடம் உங்கள் மகளின் எண்ணங்களும், சிந்தனைகளும் இருக்க இயலாது..

எனவே, மகளின் இறப்பைத் தாங்கிக் கொண்டு அமைதி அடையுங்கள்..என்று பதில் எழுதினார்..

ஆம்.,நண்பர்களே..,

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனைப் போல மற்றொரு மனிதரின் சாயலில் உருவாக்கினாலும்,

ஒரு மனிதரின் உணர்வுகளை மற்றவரிடம் கொண்டு வர இயலாது என்பதுதான் இன்றைய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.. 

ஆனால்.,

நாளைய ஆராய்ச்சிகள் இதற்கு தீர்வு காணலாம்.

It is impossible to bring one person's feelings to others. So, Reality should be accepted always.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.