Skip to main content

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டம்: 48 ரூபாயில் 28 நாட்களுக்கு இணைய சேவை!

airtel new recharge plans

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ரூ. 48 மற்றும் ரூ. 98-க்கு புதிய ப்ரீபெய்டு டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

அனைத்து ஏர்டெல் பயனர்களும் இந்த புதிய டேட்டா பேக் திட்டத்தைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், ரீசார்ஜ் செயலிகள் மற்றும் தளங்களில் இந்த பேக் வெளியாகியுள்ளது. 

இந்த புதிய 48 ரூபாய் டேட்டா ப்ளான் மூலம், 3 ஜிபி 3ஜி அல்லது 4 ஜி டேட்டாவை 28 நாட்களுக்குப் பெற முடியும்.

airtel new plans

அதேபோல 98 ரூபாய் டேட்டா ப்ளான் மூலம், 6 ஜிபி 3 ஜி அல்லது 4 ஜி டேட்டாவை 28 நாட்களுக்குப் பெற முடியும்.

98 ரூபாய் திட்டத்தில் மேலும், ஒரு நாளைக்கு 10 எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியும் கொடுக்கப்படும். 

பல வாடிக்கையாளர்களுக்கு இணையதள வசதி தேவைப்படும். ஆனால், அவர்களுக்கு அதிக டேட்டா பயன்பாடு இருக்காது. அதைப்போன்ற பயனர்களை குறிவைத்துதான் இந்த புதிய ப்ரீபெய்டு டேட்டா ப்ளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

Airtel Brings Out Two New Recharge Plans with 28 days Validity for its Customers

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.