Skip to main content

"எனது போன் ஹேக் செய்யப்பட்டதால் தான் கசோஜி கொல்லப்பட்டார்" - நண்பர் ஒமர் அப்துலாசிஸ் வருத்தம்

"எனது போன் ஹேக் செய்யப்பட்டதால் தான் கசோஜி கொல்லப்பட்டார்" - நண்பர் ஒமர் அப்துலாசிஸ் வருத்தம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி தனது சக நண்பருக்கு 400 வாட்ஸ் அப் செய்திகளை அவரது கொலைக்கு முன்பு அனுப்பியிருந்தது தெரியவந்துள்ளது. அதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை ''பீஸ்ட்'' மற்றும் ''பேக்-மேன்'' என்று விமர்சித்துள்ளார். 

இதனை தனது நண்பரான ஒமர் அப்துலாசிஸ்க்கு அனுப்பியுள்ளார்.
ஒமர் அப்துலாசிஸ், தனக்கு கசோஜியிடமிருந்து வந்த ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படங்களை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

"இந்தச் செய்திகள் சவுதி இளவரசரை சென்றடைந்தாலும் நான் கவலைப்படப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார் ஜமால்.

2017 அக்டோபரிலிருந்து 2018 ஆகஸ்ட் வரை தொடர்ந்து தனது செய்தி பரிமாற்றங்களை அவர்களோடு பகிர்ந்து வந்துள்ளார். அவரது நண்பரான அப்துலாசிசை  ட்விட்டரில் 3.4 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். கசோஜி தனது குறுந்தகவல்களில் MBS என்ற வார்த்தையை இளவரசர் முகமது பின் சல்மானை குறிக்க பயன்படுத்தியுள்ளார். 

அவர்தான் பிரச்னை; அவரை தடுக்க வேண்டும் என்று கசோஜி கூறியதாக அப்துலாசிஸ் பேட்டியில் கூறியுள்ளார்.

"ஆகஸ்ட் மாதத்திலிருந்து தகவல் பரிமாற்றம் நின்று போனதாகவும். கடைசியாக கடவுள் தான் நமக்கு உதவ வேண்டும் என்று ஜமால் தெரிவித்ததாகவும் அவரது நண்பர் கூறினார். 2 மாதங்களுக்கு பிறகு அவர் இற‌ந்துவிட்டார் என்றார். 

மேலும் அப்துலாசிஸ், இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் போன் ஹேக் செய்யப்பட்டதால் தான் கசோஜி பற்றிய விவரங்கள் வெளியே சென்றது. நான் சங்கடத்துக்குள்ளாகி உள்ளேன் என்று கூறினார். 

omar abdulaziz
Omar Abdulaziz

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நாளுக்கு நாள் எழுந்து வருகிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்த ஜமால், துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார். 

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், அவர் மாயமான விவகாரம், சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜமால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியது. 

மேலும், இதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் துருக்கி கூறியது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் பலரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

இது சவுதிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி ஒப்புக்கொண்டது. 

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் படுகொலை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில், சவுதி அரசாங்க வழக்கறிஞர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் சவுதியைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

saudi crown prince

இதுகுறித்து சவுதியின் அரசு வழக்கறிஞர் கூறுகையில், ஜமால் கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சவுதி அதிகாரிகளுக்கு அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

As my phone had been hacked Jamal Khashoggi was Killed says jamal's friend Omar Abdulaziz.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.