Skip to main content

"எனது கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார்" - பி.வி.சிந்துவின் சாய்ஸ்!

pv sindhu biopic

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.

சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசியுள்ளனர்.

அவரும் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார்.

deepika padukone

தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறுபட்ட கருத்து ஒன்றை சிந்து கூறியுள்ளார்.

"உங்கள் வாழக்கை வரலாறு படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்?" என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது, "எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் தீபிகாவும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

PV Sindhu wants Deepika Padukone to portray her in biopic, says ‘She had played the game and is a good actor too’

Tamil