Skip to main content

எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை!

எச்ஐவி

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு, மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சியால் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை. 

சாத்தூர் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து அவரது சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஜனவரி 17-ம்தேதி குழந்தை பிறந்த நிலையில் 40 நாட்கள் கழித்தே எச்.ஐ.வி. பாதிப்பு குறித்து குழந்தையிடம் சோதனை நடத்தப்படும் என கூறப்பட்டது. 

இதில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த கட்ட சோதனையிலும் எந்த சிக்கலும் குழந்தைக்கு வராது என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

hiv

நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்ப்பிணி உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் மருத்துவர்களின் கடும் முயற்சியால் கர்ப்பிணியிடம் இருந்து எச்.ஐ.வி. பாதிப்பு அவரது குழந்தைக்கு பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 

TamilNadu woman who was transfused with HIV-infected blood gives birth to a baby girl tested negative for aids.

hiv

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.