Skip to main content

சுவையான ரவை ஃப்ரைடு பிஸ்கட்!!!

சுவையான ரவை ஃப்ரைடு பிஸ்கட்!!!

தேவையான பொருட்கள்:

  • ரவை - ஒரு கப் 
  • சர்க்கரை - 8 டீஸ்பூன்
  • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
  • தேங்கைத் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் 
  • முந்திரி - தேவையான அளவு 
  • பால் - தேவையான அளவு 
  • எண்ணெய் - பொறிக்க 
  • உப்பு - ஒரு சிட்டிகை  

செய்முறை விளக்கம்:

  • ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல், முந்திரி சேர்த்துப் பிசறவும்.
  • பிறகு பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
  • பிசைந்த மாவைச் சிறிய பந்துகளாக உருட்டவும்.
  • உருண்டைகளை வடை போலத்தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

குறிப்பு:

தேங்காய்க்குப் பதில் கொப்பரைத் தேங்காயும் பயன்படுத்தலாம். ரவையை வறுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.