Skip to main content

சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி???

சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி???

தாமரையின் மொட்டை கொண்டு தயாரிக்கப்படும் இந்த கீர் இந்தியாவில் ஒவ்வொரு விழாக்காலத்திலும் செய்யக்கூடிய பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை. நவராத்திரி நாட்களில் பெரும்பாலும் இவை செய்யப்படுகிறது. இந்த ருசியாக ஆரோக்கியமான இந்த மக்கானா கீர் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பாக இருக்கிறது. இதனை எப்படி செய்து அசத்துவதென்பதை பார்ப்போம்.

மக்கானா கீர் சமைக்க தேவையான பொருட்கள்

தாமரை விதைகள்
முந்திரி - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
பால் - 3 கப்
சுவைகேற்ப சர்க்கரை
ட்ரை ஃப்ரூட்ஸ், நறுக்கப்பட்டது

மக்கானா கீர் எப்படி செய்வது

  • அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், தாமரை விதைகள் மற்றும் முந்திரியை சேர்க்கவும். சிறிதளவு கல் உப்பை தூவி வறுத்து இறக்கி வைக்கவும்.
  • சூடு ஆறியதும் அதில் முக்கால் பங்கு எடுத்து மிக்ஸியில் போட்டு அத்துடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து அதில் 2-3 கப் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • அதில் அரைத்து வைத்த விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  • பின் அதில் வறுத்து வைத்துள்ள மீதத்தை சேர்க்கவும்.
  • இந்த கலவை கெட்டியாகும் வரை கிளறி இறக்கி விடவும்.
  • இதன் மேல் வெட்டி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.