Skip to main content

சுவையான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி?

சிக்கன் பொடிமாஸ்

சுவை நிறைந்த சிக்கன் பொடிமாஸ் செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
பட்டை, லவங்கம், ஏலக்காய் கிரம்பு - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
மஞ்சள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை - 1

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து குக்கரில் சிறிதளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள், மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் சிக்கனை பொடியாகப் பிச்சி போடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் மசாலாக்களைச் சேர்க்கவும்.

வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் , கறிவேப்பிலை சேர்க்கவும்.

அடுத்ததாகத் தக்காளி சேர்க்கவும். அதோடு கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் பிச்சி போட்ட சிக்கனை சேர்த்து வதக்கவும்.

வதக்கியதும் முட்டை உடைத்து அதையும் சேர்த்துப் பிரட்டவும்.

இறுதியாகக் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

சிக்கன் பொடிமாஸ் தயார்.

Chicken Podimas: Ingredients and Method of Cooking.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.