Skip to main content

சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை!

ipl mumbai enters playoff

ஐபிஎல் தொடரில் மே 2 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் 51 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் மூன்றாவது அணி மும்பை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னை அணியும், டெல்லி அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

"டாஸ்" வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். 

ipl

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. குயின்டான் டி காக் 69 ரன்களுடனும் (58 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குருணல் பாண்ட்யா 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். 

கடைசி பந்தில் 7 ரன் தேவையாக இருந்தது. இந்த பந்தை மனிஷ் பாண்டே சிக்சராக்கி ஆட்டத்தை சமனுக்கு (டை) கொண்டு வந்தார். 

ஐதராபாத் அணியின் ஸ்கோரும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்களில் நின்றது. மனிஷ் பாண்டே 71 ரன்களுடன் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

ஐபிஎல் இன்றைய ஆட்டம் (மே 2)

சூப்பர் ஓவர்

ஆட்டம் சமன் ஆனதால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் ஐதராபாத் பேட் செய்தது. பும்ரா பவுலிங் செய்தார். இதில் 4 பந்தில் 2 விக்கெட்டையும் பறிகொடுத்த ஐதராபாத் 8 ரன் எடுத்தது.

தொடர்ந்து 9 ரன் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. ஐதராபாத் தரப்பில் சூப்பர் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பொல்லார்ட் 2 ரன் எடுத்து மும்பையின் வெற்றியை உறுதி செய்தார்.

ஐபிஎல் இன்றைய ஆட்டம் (மே 2)

நெருக்கடியில் ஐதராபாத் அணி

8-வது வெற்றியை பெற்ற மும்பை அணி 3-வது அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது.

அதே சமயம் 7-வது தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி கடைசி லீக்கில் பெங்களூரை வீழ்த்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

IPL: Mumbai beat Hyderabad in Super Over, qualify for playoffs

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.