Skip to main content

சர்க்கார் திரைப்படம் எப்படி இருக்கு?

சர்க்கார் திரைப்படம் எப்படி இருக்கு?

இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நவம்பர் 6 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியான சர்கார் படம் இந்திய சட்டம் 49பி (பிரிவு - ஓட்டு உரிமை) குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது.

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். 

தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

சர்வதேச அளவில், 3,400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் படம் வெளியாகியுள்ளது.

படம் வெளியானது முதல் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும், வசூலிலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இடம் பெற்றிருந்த 49P தற்போது இந்தியா முழுவதும் டிரெண்டாகி வருகிறது. 

இந்திய குடிமகன் ஒருவரது ஓட்டு மற்றொருவரால், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது எனில், அதனை தொடர்ந்து அவரது விருப்பத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைத்தால், வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பம் 17B ஒன்றை பூர்த்தி செய்து, உரிய அதிகாரியிடம் கொடுத்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். இது சரியாக இருந்தால், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

இதுவே அவர் பார்வையற்றவராக இருந்தால், வேறு ஒருவரது துணையுடன் செல்லக்கூடாது. மாறாக, அங்குள்ள தலைமை அதிகாரியின் உதவியுடன் சென்று அவர் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்கார் படம், அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது, நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து தனது வாக்கைப் பதிவு செய்ய இந்தியா வருகிறார். ஆனால் அவரது வாக்கு, கள்ள ஓட்டாக பதிவாகி இருப்பது அவருக்கு தெரியவருகிறது. 

இதையடுத்து, அந்தத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய். 49P பிரிவின் படி விஜய் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வாக்குச்சாவடி அமைக்கவும் உத்தரவிடுகிறது. 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது ஓட்டும் கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டதால், தங்களுக்கும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்று 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்கின்றனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, மறு தேர்தல் நடத்த உத்தரவிடுகிறது. 

இதையடுத்து என்ன நடக்கிறது என்பது சர்கார் படத்தின் இரண்டாம் பகுதி கதை. இந்த நிலையில், இந்த 49P சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, முதல் முறையாக இந்தியா அளவிலும் டிரெண்டாகி வருகிறது.

Sarkar movie review.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.