மத்திய பள்ளிக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. அதன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த நாட்களுக்கு இடையே போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை சிபிஎஸ்இ உறுதி செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜே.இ.இ. மெய்ன் (JEE main) தேர்வுகள் நடைபெற்றதால், 12-ம் வகுப்பு இயற்பியல் பாடம் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பொது தேர்வுகள் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரைக்கும் நடைபெறும். இருப்பினும் விடையளிக்கும் தாள்கள் காலை 10 மணிக்கு வழங்கப்படும். கேள்வித் தாள்கள் காலை 10.15-க்கு மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் அட்மிஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, சிபிஎஸ்இ தேர்வு கண்காணிப்பாளர் சன்யார் பரத்வாஜ் கூறுகையில், டெல்லி பல்கலைக்கழக சேர்க்கைகளுக்கு ஏற்ற வகையில் சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இரு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணைக்கு பின்வரும் இணைய முகவரியை கிளிக் செய்யவும்
http://cbse.nic.in/newsite/circulars/2018/Class-X_datesheet.pdf
12-ம் வகுப்பு தேர்வு அட்டவணைக்கு பின்வரும் இணைய முகவரியை கிளிக் செய்யவும்
http://cbse.nic.in/newsite/circulars/2018/Class-XII_dt_sheet.pdf
CBSE announced the board exam dates for 10 th and 12 th standards.