Skip to main content

சிபிஎஸ்இ பொது தேர்விற்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது !!!

சிபிஎஸ்இ பொது தேர்விற்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது !!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொது தேர்வில் பங்கு பெரும் தனி தேர்வாளர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது

மத்திய உயர்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு படிவங்களை ஆன்லைன் சமர்ப்பிப்பு செயல்முறை மூலம் துவங்கியுள்ளது.

விண்ணப்பமுறை அக்டோபர் 23 ஆம் தேதி துவங்கி, நவம்பர் 17 ஆம் தேதி வரை தொடரும். 

http://cbse.nic.in/ எனும் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இந்த படிவங்கள் கிடைக்கப்பெறும்.

நவம்பர் 17 ஆம் தேதியை தவறவிட்ட மாணவர்கள் நவம்பர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தாமதமாக சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

நவம்பர் 23 ஆம் தேதியை தவற விடும் மாணவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும், இதற்காக 1000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும்.    

இறுதியாக டிசம்பர் 14 தேதி வரை சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு 5000 ரூபாய் விதிக்கப்பட உள்ளது. இதுவே கடைசி தேதியாகும்.

பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இலவசம். இந்த விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தேர்வு 
கட்டணமும் ஆன்லைன் மூலமே கட்ட வேண்டும்.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.