Skip to main content

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இரு மாணவிகள் முதலிடம்!

#CBSE12thResults

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இதில் 83.4% சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலிடம்:

இந்த தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா என்ற 2 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.

இரண்டாம் இடம்:

ரிஷிகேஷை சேர்ந்த கெளராங்கி சாவ்லா, ரேபேரேலியை சேர்ந்த ஐஷ்வர்யா, ஹரியானவை சேர்ந்த பாவ்யா ஆகிய 3 பேரும் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

497 மதிப்பெண்கள் பெற்று 18 மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.    

94,299 மாணவர்கள் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

#CBSE12thResults

இதில், மத்திய அரசால் இயக்கப்படும் கேந்திரியா வித்யாலயா பள்ளி 98.54 சதவீதம் தேர்ச்சியும், ஜவஹர் நவோதியா வித்யாலயா பள்ளி 96.62 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது.

தேர்வு நடந்த முடிந்த 28 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது, தேர்வும் முன்கூட்டியே நடைபெற்றது.

அதேபோல், வழக்கமாக தேர்வு முடிவுகளும் மே மாதம் 3 வாரத்திலே வெளியிடப்படும், ஆனால், இம்முறை முடிவுகளும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 2019 முடிவு: மொத்த புள்ளிவிவரங்கள் 

மொத்த மாணவர்கள் - 13,00,000
மொத்த ஆண் மாணவர்கள் - 7,48,498
மொத்த பெண் மாணவர்கள் - 5, 38,861
மொத்த தேர்ச்சி சதவீதம் - 83.4%
மேல் பகுதி - திருவனந்தபுரம்: 98.2%
வெளிநாட்டு பள்ளிகள் சதவீதம் கடந்து - 95.43%
ஆண் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் - 79.4%
பெண் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் - 88.70%
திருநங்கை மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் - 83.3%
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் - 90.25%

​    CBSE 12 TH RESULT

பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் 

http://cbse.nic.in/

http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx

https://results.gov.in/nicresults/index.aspx

http://cbse.examresults.net/

CBSE 12th Result 2019: Hansika Shukla and Karishma Arora tops

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.