Skip to main content

"சிந்து நதி ஒப்பந்தம்" தடை செய்யபட்டால் கவலை இல்லை ‍- பாகிஸ்தான்

"சிந்து நதி ஒப்பந்தம்"

ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

ஜம்மூ- காஷ்மீரின், ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 78 வாகனங்களில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 22 வயது நிரம்பிய தீவிரவாதி ஒருவன், 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொண்ட கார் மூலம் வந்து, பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தில் மோதினான். இதனால், 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு 

இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

புல்வாமாவிலுள்ள ககபோராவிலிருந்து அடில் அஹ்மத் என்ற பயங்கரவாதியை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி உள்ளிட்ட 3 நதிகளின் நீரை தடுத்து இந்தியாவின் யமுனை ஆற்றை வளப்படுத்த பயன்படுத்தப்போவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அங்கிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரியை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமாபாத், சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்திவிட்டால் எந்தவித கவலையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை என்று பாகிஸ்தான் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

Neither Concern, Nor Objection: Pakistan on Nitin Gadkari’s Indus Waters Treaty Statement
.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.