Skip to main content

சினிமாவில் இருந்து  விடைபெறுகிறேன் - கமல் பரபரப்பு தகவல்

'இந்தியன் 2'

'இந்தியன் 2' திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து  விடைபெறுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்களின் மக்கள் நீதி மய்யம்  கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில்  கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம் தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும்.

முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால்  ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.

நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் என்னுடைய ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து சினிமாவில் பங்களிப்பைச் செலுத்தி வரும்.

'இந்தியன் 2' படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்'' என்று தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை துவங்கினார்.

1959 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை கதாபாத்திரமாக கமல்ஹாசன் அறிமுகமானார். 

பிற்காலத்தில் உலக நாயகன் இயக்கம், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் கட்டுரையாளர் என அனைத்து பணிகளையும் செய்தார் கமல் ஹாசன், இவரது திறமையை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் வெளிகொண்டுவந்தார். 

1992 ஆம் ஆண்டு கமலின் "தேவர் மகன்" திரைப்படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார் - மூன்றாம் பிறை(1983), நாயகன் (1988), தேவர் மகன் (1992) மற்றும் இந்தியன் (1996).

Indian 2 will be my last film in cine field says ulaga nayakan kamalhassan.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.