Skip to main content

சீன ஓபன் டென்னிஸ் - இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி

சீன ஓபன் டென்னிஸ் - இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி

முன்னாள் இந்திய சாம்பியன்கள் பி.வி. சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர், சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சிந்து 21-12, 21-15 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் புசானான் ஓங்க்பாம்ருங்கன்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 

இதன்மூலம், இந்தோனேசியாவின் டாமி சுகார்ட்டோனை மூன்று போட்டிகளில்  வீழ்த்தி, இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கால் இறுதியில் பிங்கிஜியாவுக்கு எதிராக கடுமையான சோதனையை ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார். 

உலக தரவரிசையில் 7 வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனையுடனான தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த சிந்து, நாளை நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் காலிறுதியில் தனது இரட்டை இழப்பை பழிவாங்க ஆர்வமாக உள்ளார்.

45 நிமிட ஆண்கள் ஒற்றையர் போட்டியில் டாமி சுஜியாரோவை 10-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் வென்றார் ஸ்ரீகாந்த்.

குண்டூரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான ஸ்ரீகாந்த், 2014 ஆம் ஆண்டு சீன ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

அடுத்து, அவர் இந்த ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன தைபேயின் சவ் டைன் சென்னை ஸ்ரீகாந்த் எதிர்கொள்வார்.

பட்டியலில் 9 ஆம் இடத்தில உள்ள ஸ்ரீகாந்த், கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னுக்கு எதிராக இரண்டு முறை தோல்வியடைந்தார். அவர் 2014 ஆம் ஆண்டு ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி இணை முதல் சுற்றிலேயே ஜப்பானிய இணையிடம் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Badminton: Sindhu, Srikanth reach quarterfinals of China Open

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.