Skip to main content

செயற்கை நுண்ணறிவு - எதிர்கால பயன்கள்!

artifical intelligence

AI என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கைநுண்ணறிவு (Artificial Intelligence) குப்பை மின்னஞ்சல்களை வடிகட்டுவது நல்ல புத்தகங்களை பரிந்துரைப்பது என்பன போன்ற மிகச்சாதாரண பணிகள் மட்டுமல்லாது நம்முடைய மனிதவாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் நீக்கமறநிறைந்து இரண்டற கலந்துபயன்படவிருக்கின்றது.

இந்த செயற்கை நுண்ணறிவின் அவ்வாறான பயன்களை பற்றிய ஒரு 
முன்னோட்டம்.

மெய்நிகர் உதவியாளர் (Virtual assistants)

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் மெய்நிகர் உதவியாளர் (Virtual assistants) வசதி தனிமனித உதவியாளராக மட்டுமல்லாமல் வணிக நடவடிக்கைகளிலும் நிறுவன செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு நிறுவனங்களின் உற்பத்தியை பெருக்கி லாபத்தை உயர்த்துவதற்கான உற்ற நண்பனாக விளங்க விருக்கின்றது. அதிலும் நம்முடைய குரலொலி (Voice or speaker recognition) வாயிலாகவே இந்த உதவியாளரை நமக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடுமாறு கட்டுப்படுத்திடும் திறன்கொண்டது.

virtual assistants

முகத்தை அடையாளம் காணுதல் (Face Recognition):

நாம் செல்லுமிடங்களுக்கு நம்முடைய கடனட்டையை அல்லது வங்கி அட்டையை கொண்டு செல்லத் தேவையில்லை அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படவிருக்கும் நம்முடைய உருவ அங்கீகாரத்தை (Facial recognition) கொண்டு ATM வாயிலாக நம்முடைய செலவிற்கு தேவையான பணத்தை எடுப்பது , நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது, நாம் எங்கிருக்கின்றோம் என்னென்ன செய்கின்றோம் என அனைத்தையும் அறிந்து கொள்வது ஆகிய அனைத்தையும் இதன் மூலம் செயற்படுத்தி கொள்ளமுடியும்.

தொழில்:

நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலுள்ளவர்கள் இந்த செயற்கை நுண்ணறிவை கொண்டு சமீபத்திய நிகழ்வுகளின் போக்குகளை அறிந்து அதனடிப்படையில் தம்முடைய நிறுவனத்தை புதுப்பிப்பது, விரிவுபடுத்துவது மேம்படுத்துவது ஆகிய பணிகளை மிக விரைவாக எளிதாக செய்து கொள்ளமுடியும்.

artificial intelligence

பல்லூடகங்களை கையாளுதல் (Multimedia):

அதுமட்டுமல்லாது பல்லூடகங்களை (Multimedia) கையாளுதல் வாடிக்கையாளர் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவரவர் விரும்பும் வகையிலான விளம்பரங்களை இசைகளை கானொளி காட்சிகளை உருவப்படங்களை அசைவூட்டு படக்காட்சிகளை பயனாளர்கள் பயன்படுத்திடும் சமூக பல்லூடகங்களிலேயே வெளியிடச் செய்திட முடியும் அதிலும் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களை மிகச்சரியாக வெளியிடமுடியும்.

நமக்கு ஏற்படும் எந்தவொரு சந்தேகத்தையும் ,சிக்கலுக்கான தீர்வையும் இந்த செயற்கை நுண்ணறிவிடம் கேள்வியாக கேட்டவுடன் அதற்கான தீர்வை உடனடி ஆலோசனையாக வழங்கவிருக்கின்றது.

artificial intelligence

மருத்துவத்துறை

இந்த செயற்கை நுண்ணறிவானது மருத்துவத்துறையில் நோயாளிகளின் உடலில் காணும் நோய்களுக்கானஅனைத்து அறிகுறிகளையும் முழுவதுமாகஅலசி ஆராய்ந்து நோய்க்கான மிகச்சரியான மருந்துகளை மிகச்சரியான அளவிற்கு பரிந்துரை செய்யவிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் மிகச்சிக்கலான அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவ்வாறான அறுவை சிகிச்சைகளை மிகச்சரியாக செய்வதற்கான மிகச்சிறந்த உதவியாளராக இந்த செயற்கை நுண்ணறிவு விளங்கவிருக்கின்றது.

மேலும் மனித படைப்பாற்றலை ஆராய்ந்து விரிவுபடுத்தி மேம்படுத்திடும் மனித வாழ்வின் சிறந்ததொரு வாய்ப்பாக இந்த செயற்கை நுண்ணறிவானது விளங்கவிருக்கின்றது.

medicall field

இருப்பினும், பெரும்பாலான பணிகளில் அதிகரித்த தானியங்கி செயல்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுமோ என பெரும்பாலானோர் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

இந்த செயற்கை நுண்ணறிவின் மூலம் பலர் வேலையில்லாமல் இருப்பதாக நம்புகின்றனர், எது எவ்வாறு இருப்பினும் எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளையும் நம்முடைய மனித வாழ்வினை மேம்படுத்திடுவதற்கேற்ப நல்வாய்ப்பாக வரவேற்று அதனை மிகச்சரியாக பொருத்தமாக பயன்படுத்தி முன்னேறுவதற்கான வெற்றிபடிகளாக மாற்றிடுவதே சரியான வழிமுறையாகும் என பரிந்துரைக்கப்படுகின்றது.

Scope of Artificial Intelligence in Future World

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.